Sunday, June 30, 2024

நல்ல நல்ல நிலம் பார்த்து...

நல்ல நல்ல நிலம் பார்த்து....


ஹர்சன்..

எனது வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவன்.
கடலோர கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க கல்வியை பயின்று ஆறாம் வகுப்பிற்கு விடுதியில் தங்கி வகுப்பிற்கு வந்தான்.

பெரும்பாலும் பெற்றோரின் அன்பும் அரவணை ப்பு அதிகமாக பெற்ற குழந்தைகளும்... சுதந்திரமாக வளர்ந்த குழந்தைகளும் விடுதி வாழ்க்கைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவது உண்டு.
ஹர்ஷனும் அதில் விதிவிலக்கல்ல.
பள்ளிக்கு வந்த மூன்றாம் நாள் மாலையில் யாரிடமும் சொல்லாமல் பள்ளி முடிவுற்றதும் பேருந்தில் ஏறி ஊருக்கு கிளம்பி விட்டார்.

அவரது ஊரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உடன் இருந்ததால் நேரடியாக இரவு வீட்டிற்கு சென்று சேர்ந்து விட்டார்.

அதன் பின்பு இரு வாரம் பள்ளிக்கு வரவில்லை.

வேறு பள்ளியிலும் அவர் சேரவில்லை.

பெரும்பாலும் பெற்றோர்கள் கூறக்கூடிய பதில் ஒன்றுதான் ..
"ஒழுங்கா படி இல்லாவிட்டால் கடல் தொழிலுக்கு போ.."

ஒருவேளை நம்ம ஹர்சனுக்கும் அதே நிலை ஆகி விடக்கூடாது என்பதால் கருங்கல் அருகே தேவிகோடு பகுதியில் அவரது பாட்டி வீட்டில் அவரை இன்று மாலை 7.00 மணிக்கு சந்தித்தேன்.

ஒரு மணி நேரம் பேசிய பின்பு அங்கிருந்து பள்ளிக்கு வருவதாக அவர் கூறினார்.

சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் தினசரி பயணித்து பள்ளிக்கு வருவது இயலாத காரியம் என்று கூறி அருகில் உள்ள பள்ளியில் நீ சேர்ந்து படி...
உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேள் என்று கூறிவிட்டு அவன் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு குழந்தைகளுக்கான புத்தகத்தை பரிசளித்து வந்தேன்.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் கருங்கல் வட்டார தலைவரும் மங்கலக்குன்று 
பள்ளி பட்டதாரி ஆசிரியருமான ஜார்ஜ் தாஸ் உடன் வந்தார்.

EMIS இல் இருந்து
அவரை விலக்கி விடலாம் ...
ஆனால் மற்றொரு பள்ளியில் அவர் சேர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டுமே.

நம்மை நம்பி வந்த மாணவன் அல்லவா...
தற்போது அவனுக்கு கல்வியின் அருமை புரியாமல் இருக்கலாம்.

இவற்றையெல்லாம்  கடந்து நன்கு கல்வி கற்று உயர் நிலைக்கு வரும்போது அவன் உணர்வான் கல்வியின் முக்கியத்துவத்தை..
..
அதற்கு பெற்றோர்... ஆசிரியர்களின் உடன் இருப்பு அவசியம்.

" நல்ல நிலத்தில் விதைக்க வேண்டும்.
"
வழியோரத்திலும் முப்புதறிலும் பாறைகளிலும் விதை விழுகிறது என்றால் விதையின் குற்றம் அல்ல... விதைப்பவனின் குற்றம்!

பங்குத்தளங்களில் உள்ள ஏராளமான குழுக்களில் கல்விக் குழு என ஒன்று இருந்தால் அது நிச்சயம் இதுபோன்ற கடமைகளை செய்திருக்கும்.

கோயில்களைப் பற்றி கவலைப்படும் சமூகம் தெய்வங்களைப் பற்றி எங்கே பேசப் போகின்றது?

 அவன் பாட்டி கூறிய பதில் , "ஐயா இவன் ஐந்தாம் வகுப்பு படிப்பதற்குள் 5 பள்ளிகளை பார்த்து விட்டான்" என்றார்.

பத்தாம் வகுப்பு படிப்பதற்குள் 10 பள்ளிகளை பார்த்துவிட்டு போகிறான் ...

குழந்தை படிக்க வேண்டும்...
 எந்த பள்ளி என்றால் என்ன என்று அவரிடம் கூறிவிட்டு அவனை படிக்க வையுங்கள் ...
அதுவே அக்குழந்தைக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
 என்று கூறி விட்டு விடைபெற்றோம்.

Tuesday, June 25, 2024

கார்மலின் 3 ஆவது பள்ளி பேரவை



கார்மல் பள்ளியின் 3- ஆவது பள்ளி பேரவை.

24.06.2024, திங்கள்கிழமை.


கார்மல் பள்ளியின்
3- ஆவது பள்ளி பேரவை 24.06.24, திங்கள் கிழமை காலையில் நடைபெற்றது.
மாணவர்கள் இறைவணக்கம் பாடல் பாட, மும்மறை வாசகத்துடன்...
தொடங்கியது.

பள்ளித் தலைமையாசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளித் தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் சே.ச.
அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவரும் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் துறை தலைவராகவும் பேராசிரியராகவும்
பணிபுரிந்து வரும் முனைவர் வின்சென்ட் காமராஜ் அவர்களும்

 கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவரும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் முனைவர் லீனஸ் மார்ட்டின் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டுதல் உரை  நிகழ்த்தினர்.



கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகிக்க பலவிளை காமராஜர் கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின பேச்சு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு செய்யப்பட்டது.
ஆசிரியர் திரு. வெர்ஜின், திரு. ஜார்ஜ் விஜயன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

Friday, June 21, 2024

கார்மல் பள்ளி ஆசிரியர் அலுவலர் தேர்வு

Carmel News:
21.06.2024.

இன்று கார்மல் பள்ளியில்  ஆசிரியர் அலுவலர் கூட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் அலுவலர் செயலாளர் திரு கிளைமான்ஸ் அனைவரையும் வரவேற்றார்.


தலைமையாசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச.
தலைமை உரையாற்றினார்.
ஆசிரியர்  அலுவலர் செயலாளர் கடந்த கூட்ட அறிக்கையை 
சமர்ப்பித்தார்.
2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான
புதிய ஆசிரியர் அலுவலர் தேர்வு நடைபெற்றது.
தேர்தல் அலுவலராக உதவி தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜேசு நேசம் சே.ச.அவர்கள்  வழிகாட்டலில் ஆசிரியர் திரு. அருள் ராஜன் அவர்கள் முன்மொழிய ஆசிரியர் திரு. டோமினிக் ராஜ் அவர்கள் வழி மொழியை  முதுகலை வேதியல் ஆசிரியர் முனைவர் ஜாண் பிரிட்டோ அவர்கள் ஆசிரியர் அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் சே.ச.
ஆசியுரை வழங்கினார்.
நிறைவாக ஆசிரியர் திரு.பினுமோன் நன்றி கூறினார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் அலுவலர் செயலாளர் முனைவர். ஜாண் பிரிட்டோ அவர்களை அனைவரும் வாழ்த்தினர்.