Friday, August 9, 2024

நாகசாகி தினம் ... ஆகஸ்ட் 09


carmel_ngl 


நாகசாகி தினம்-ஆகஸ்ட் -09

 1945-ஆம் ஆண்டு இதே நாளில் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இந்தத் தாக்குதலின் நினைவு தினமான இன்று அணு ஆயுதத்தை நம்பி உலக நாடுகள் இருக்க வேண்டாம் என உலக தலைவர்கள் எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசிய (ஆகஸ்ட் -06)மூன்று நாட்களுக்கு பின்னர் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அப்போது அணுகுண்டை வீசியது. ஃபேட் மேன் (Fat Man) எனும் அணுகுண்டை அன்றைய தினம் (ஆகஸ்ட் -09)காலை 11.02 மணி அளவில் அமெரிக்கா வீசியது. அது ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 74,000 பேர் உயிரிழந்தனர். அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் வாழ்நாள் முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொண்டனர்.
 
நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு, அதில் உயிரிழந்தவர்களுக்கு  இன்று  கார்மல் பள்ளி 6 மற்றும் 8  ஆம் வகுப்பு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.


 அணு சக்தி ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது. 
மனித குலத்திற்கு  எதிராக இருக்கும் அணு ஆயுத பெருக்கம் உலகின் அழிவுக்கு காரணமாகி விடக்கூடாது. பேராபத்தை விளைவிக்கும் அணு ஆயுதத்துக்கு  எதிராக எனது வகுப்பு மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
உலகினை அழித்திடும் யுத்தமே  வேண்டாம்... வேண்டும் சமாதானம்...
 என்றும் வேண்டும் சமாதானம்.....
 எங்கும் வேண்டும் சமாதானம்!

கற்றல் என்பது தேர்வுக்கு மதிப்பெண்களை எடுப்பது மட்டுமே என்ற நிலை மாறி அது வாழ்வியலுக்கானது என்பதை உணர்த்தும் செயல்பாடு. 

கற்பித்தல் என்பது பாட நூல்களில் மட்டுமே அமைந்திடாமல் அது உலகளாவிய பார்வையை மாணவர்கள் உள்ளங்களில் விதைக்க வேண்டும்...
இதுவே என் வகுப்பறை செயல்பாடு. 

 .

No comments:

Post a Comment