Thursday, December 20, 2018

கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

கார்மல் பள்ளியில் ஆசிரியர் அலுவலர்களுக்கான கிறிஸ்மஸ் விழா:
--------------------------------------------------
  நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் இயேசு சபை நிர்வாகம் சார்பாக அனைத்து வளாகப் பணியாளர்களும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ் விழா 20.12.18 அன்று மாலை 6.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
கார்மல் இசைக் குழு இறைவணக்கம் பாட ஆசிரியர் திரு.D.டேவிட் ராஜ்  அனைவரையும் வரவேற்றார்.அலுவலகப்
பணியாளர் திருமதி C.கலா இறைவார்த்தையை வாசிக்க அருட்பணி.S.மரிய சிங்க ராயர் சே.ச.குடிலை அர்ச்த்தார்.தாளாளர் மற்றும் இல்லத்தலைவர் அருட்பணி.A.சேவியர் ராஜ் சே.ச. ஆசியுரை வழங்க,திருமதி சாந்தி இன்னிசைப் பாட திரு.S.பிரேம் தாஸ் கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கினார்.
   அனந்தன்நகர் புனித ஜெரோம் கல்லூரியின் தாளாளர் அருட்பணி A.சுவக்கீன் அவர்கள் கிறிஸ்த்து பிறப்பு பெருவிழாவின் சிறப்புரையாற்றினார்.அருட்சகோ.தேவதாஸ் சே.ச. அவர்கள் கேக் வெட்டி இனிப்பு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார்.ஆசிரியர் திரு.ஜெயபால் தலைமையில் "சமத்துவம் சங்கமாகட்டும் "
என்ற நாடகம் நடத்தப்பட்டது.தலைமையாசிரியர் அருட்பணி A.வில்சன் சே.ச.அவர்கள் அருளுரை வழங்க அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டன. ஆசிரியர் அலுவலர் செயலர் திரு.Y.ஜார்ஜ் பிராங்க்ளின் சுதர் நன்றி கூறினார்.ஆசிரியர் திரு.S.பாபு சைமன் ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Monday, November 26, 2018

கார்மல் பள்ளியில் தேசிய மாணவர் படை தினவிழா

 கார்மல் பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா:
------------------------------------------------------------
          நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தினவிழா நடைபெற்றது.மாணவர்கள் இறைவணக்கம் பாட NCC  மாணவர் ஆன்றோ  ரோகன் 
அனைவரையும் வரவேற்றார் .II TN BN NCC கமாண்டர் திரு.சிந்து அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்கள்.
கார்மல் NCC இயக்குநர் திரு.M.அருள் ராஜன் தனது உரையில்...
   "நமது கார்மல் தேசிய மாணவர் படைவீர்ர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு எய்திவருகின்றனர்.இந்திய அளவில் 1948 ஆம் ஆண்டு NCC தோற்றுவிக்கப்பட்டது.இது 71 வது ஆண்டுவிழா.1999 ஆம் ஆண்டு அருட்திரு.மரிய சிகாமணி சே.ச. அவர்களது முயற்சியால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பதினொரு மாணவர்கள்  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில்  கலந்துகொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
2004 - இல் அகஸ் பிரபு;
2005 -இல் மிலார்டு 
2006 -இல் ராஜ் கபில் மற்றும்
           - அஜின் போஸ்கோ;
2008-இல் அருள் செல்வம்,
2010 -இல் P.தீபன்;
2012 -இல் B.ஜெர்சன் ராஜ்;
2014 -இல் A.ஸ்டானி ஜானுவெல்;
           -  அபோத் கில்லர்;
2016 -இல் ஜாவாஸ் நவீன்;
           - அபிஷ் லால்.
இத்துடன் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் பயிற்சி முகாமில் சிறந்த வீரர்,
சிறந்த பள்ளி,குழுப்போட்டிகள் என பல பரிசுகளை பெற்று அனைவரது பாராட்டைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
நமது மாணவர்கள் எந்த பயிற்சி முகாமுக்குச் சென்றாலும் தனிமுத்திரை பதித்து பரிசுடனே திரும்புவர் . இது கார்மலுக்கே உரிய தனிப்பண்பு! இதில் NCC யும் தனி அடையாளத்தை நமது மாவட்டத்தில் பதித்து பாராட்டு பெற்று வருவது சிறப்புக்குரியது!
வேறு இடங்களில் இல்லாத அளவு நமது NCC மாணவர்களுக்கு இதுவரை பல லட்சம் உதவித்தொகையை பெற்றுத்தந்துள்ளோம்.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளிலும்,
பணியிடங்களிலும் சிறந்து விளங்குவதே இந்த பயிற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றேன். ஒரு மாணவன் சிறந்த குடிமகனாக மாறவேண்டும் என்றால் வீட்டிலும்,பள்ளியிலும் ,சமுதாயத்திலும் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும்.அப்போதுதான் தேசத்தின் குடிமகனாக வாழமுடியும்.பார்போற்றும் நல்ல குடிமகனாக திகழ உங்களை வாழ்த்துகின்றேன்!"
   என்று கூறினார்.
அதன்பின் பேசிய தலைமையாசிரியர் தந்தை அவர்களும்,தாளாளர் தந்தை அவர்களும் பள்ளியில் செயல்படும் இயக்கங்களில் சிறந்த இயக்கம்,அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று செய்யும் இயக்கம் என்று புகழாரம் சூட்டினர்.
   நிறைவாக மாணவர் மணிக்குமார் நன்றி கூறினார். NCC மாணவர்கள் சுகின், ராபின் ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.

Saturday, November 24, 2018

கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி:
-------------------------------------------------
    நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 24.11.18,சனிக்கிழமை அன்று நடைபெற்றது.மாணவர்கள் இறைவணக்கப் பாடல் பாட
ஆசிரியர் திரு.M.இஞ்ஞாசி ராஜா
அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி.A.வில்சன் சே.ச. தலைமையுரையாற்றினார்.
தாளாளர் அருட்பணி.A.சேவியர் ராஜ் சே.ச. ஆசியுரை வழங்கினார்.
முக்கூடல் மத்திய மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் A.ஆல்பர்ட் கிங்ஸ் பெர்னட் சிறப்புரையாற்றினார்.ஆசிரியர் திரு.L.பினு மோன் நன்றி கூறினார்.ஆசிரியர் திரு..M.சந்தியாகு நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
மாணவர்கள் 235 வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
 கார்மல் அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர். திரு.பாபு சைமன் தலைமையில்  அறிவியல் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tuesday, November 13, 2018

கார்மல் மாணவன் தடகளப் போட்டியில் சாதனை.

வாழ்த்துகள் கார்மலின் உசேன் போல்ட்!
--------------------------------------------------------
நண்பர்களே கடலூர்மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற 2018-19 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான 61-ஆவது குடியரசு தின விழா தடகளப் போட்டியில் நமது கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் P. அசதுல்லா முஜாகித் (XII-A) அவர்கள் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மும்முறை தாண்டலில் (Trible Jumb)
15.42 மீ. தாண்டி தங்கப் பதக்கமும் 
 புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
          மேலும் 100 மீ.விரைவு ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று நமது பள்ளிக்கும் நமது மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். 
   இதற்காக பாரட்டப்பட வேண்டியது மாணவனையும்,அவனது தந்தையையும் என்றாலும் பெரிதும் பாரட்டப்பட வேண்டியவர் உடற்கல்வி ஆசிரியர் நண்பர் சுரேஷ் பாபு ஆவார்.அசதுல்லாவின் திறமையை அவன் 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கண்ணுற்று அனவனுக்கு பள்ளி வளாகத்திலும் ,அண்ணா விளையாட்டு அரங்கிலும் தனியாக ஒருநாளைக்கு சுமார. 2-3  மணி நேரங்களாவது பயிற்சியளித்து ஐந்து ஆண்டுகளில் வார்த.தெடுத்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது சாதனை செய்திட வேண்டியது...செய்முறை தேர்வினால் அது இயலாது போனதை தற்போது சாதித்துக் காட்டியுள்ளார். சிறந்தமுறையில. பயிற்சியளிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்,பள்ளியை நிர்வகித்துவரும் இயேசு சபை குருக்கள் ,ஆசிரியர்களின் முயற்சியால் வருங்காலங்களிலும் அசதுல்லாக்கள் தொடர்வார்கள்...
என வாழ்த்துவோம்.
    நாட்டின் நாளைய நம்பிக்கைகளை உருவாக்கிவரும் கார்மல் கலைமனை வாழ்க! வாழ்க!
#காண்க:https://youtu.be/v8VsMYRg4q0

Tuesday, October 16, 2018

கார்மல் பள்ளியில் இளையோர் எழுச்சிநாள் பள்ளிப் பேரவை

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளான 
இளையோர் எழுச்சி நாள்விழா மற்றும் உலக கைகழுவும் தினவிழா கொண்டாடப் பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச.அவர்கள் தலைமைதாங்கினார்.தாளாளர் அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் திரு.A.அருள்பிரபாகர் அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.மாணவர் S.P.பிரஜோ (IX-B) அனைவரையும் வரவேற்றார்.மாணவர் T.ஆகாஷ்(VIII-E) கவிதை வாசித்தார்.லசாக் வழிகாட்டி ஆசிரியர் திரு.S.ஜாண் போஸ்கோ ரெஜின்ஸ் சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் நடனம.,நாடகம் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக மாணவர் A.அஜித் (IX-E) நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.
15.10.2018, திங்கள் கிழமை

கார்மலில் இளையோர் எழுச்சி நாள் பள்ளிப்பேரவை

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளான 
இளையோர் எழுச்சி நாள்விழா மற்றும் உலக கைகழுவும் தினவிழா கொண்டாடப் பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச.அவர்கள் தலைமைதாங்கினார்.தாளாளர் அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் திரு.A.அருள்பிரபாகர் அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.மாணவர் S.P.பிரஜோ (IX-B) அனைவரையும் வரவேற்றார்.மாணவர் T.ஆகாஷ்(VIII-E) கவிதை வாசித்தார்.லசாக் வழிகாட்டி ஆசிரியர் திரு.S.ஜாண் போஸ்கோ ரெஜின்ஸ் சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் நடனம.,நாடகம் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக மாணவர் A.அஜித் (IX-E) நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.
15.10.2018, திங்கள் கிழமை

Monday, October 1, 2018

கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி:

கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி!
----------------------------------
நாகர்கோவில் தீயணைப்பு அலுவலர் அவர்கள் 25/06/18 அன்று மாலை 3.30 மணிக்கு கார்மல் பள்ளி ஆசிரியர்களுக்கு தீ, வெள்ளம் ,புயல், போன்ற இடர்பாடின்போது மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்றும் தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பள்ளித்தாளாளர்
அருட்பணி சேவியர் ராஜ் சே.ச. அவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் அருட்பணி ஆ.வில்சன் சே.ச. அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.