My_Student
தமிழ் வழி கல்வி அவமானம் அல்ல அடையாளம்!
2006 ஆம் ஆண்டு இவர்கள்
கார்மல் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு தமிழ் வழி பிரிவில் பயின்றவர்கள்.
2010 ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து கல்லூரி கல்விக்கு பயணித்தவர்கள்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு...
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு ஆய்வு கட்டுரை தயார் செய்வதற்காக 5 மாணவர்கள்கொண்ட குழுவை அமைத்து மூன்று மாதங்கள் ஒரு தலைப்பில் ஆய்வு செய்வது வழக்கம்.
அப்படி அறிமுகமான இந்த ஐவரில் பிரதீப் தற்போது துபாயில் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிகிறார்.
ரூஸ்வெல்ட் இவர்தான் குழுவின் தலைவர்.
தற்போது வங்கி மேலாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் உள்ளார்.
மதன் அவர்கள் அப்போதே வித்தியாசமாக சிந்திப்பவர்.
படைப்பாற்றல் திறன் மிக்க பேச்சாளராகவும் நகைச்சுவை ததும்ப பேசுபவர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரு பொறியியல் கல்லூரியில்
பொறியியல் பட்டப்பிரிவில் படிக்கும்போது நான்காவது வருட மாணவர்களுக்கு
ப்ராஜெக்ட் என்னும் செயல்திட்டத்தை வழங்குவது வழக்கம்.
அவரது துறை தலைவர் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தலைப்பை கொடுத்து இதனை செய்து வாருங்கள் என்று கூறும் போது மதன் மட்டும் தனக்குத் தேவையான தலைப்பை தானே உருவாக்கி அதனை சுயமாக செய்வதாக உறுதி கூறி செய்தும் காட்டினார்.
பெரும்பான்மையான கல்லூரிகளில் அந்த துறைத்தலைவர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த செயல்திட்டத்தை கொடுத்து அதனைக் காட்சிப்படுத்தி
அதற்கான அகமதிப்பீட்டை வழங்குவது வழக்கம்.
ஆனால் மதன் மட்டும் மாறுபட்டு ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
அதற்காக பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கண்காட்சியில் மதனுக்கு முதல் பரிசு கிடைத்தது.
"இது எவ்வாறு உன்னால் சாத்தியமானது ?"என்று அந்த துறைத்தலைவர் கேட்டபோது,
நாங்கள் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இதுபோன்ற செயல்திட்டங்களை எங்கள் பள்ளியில் செய்து உள்ளோம் என்று அமைதியாக புன்னகையுடன் பதில் உரைத்துள்ளார்.
அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.
அப்போது அதனை பகிர்ந்து கொண்டார்.
நானும் அவனை பாராட்டினேன்.
கல்வியின் உண்மையான பலன் இதுதான் என்று கூறினேன்.
பல இடங்களில் இவர்களைப் பற்றி எடுத்துரைப்பதுண்டு
நேற்று ஒரு தேநீர் கடையில் தேனீர் பருகி கொண்டிருக்கும்போது என் அருகில் வந்து பவ்யமாக நின்று என்னை உங்களுக்கு தெரிகிறதா?
என்று கேட்டார்.
வயதின் காரணமாக
அவனது முகமும் அந்தப் புன்னகையும் மட்டும் மனதில் இருந்தது பெயர் மறந்து இருந்தது.
நினைவு படுத்தி பார்த்தேன்.
என்னிடம் பயின்றவர் என்று எனக்கு நினைவு உள்ளது ஆனால் பெயர் மறந்து விட்டதே என்று கூறினேன்.
ஐயா நான் எம் எஸ் மதன்
என்று கூறியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அவனை அனைத்து கொண்டேன்.
ஒரு ஆண்டுக்கு
300 மாணவர்களை கடந்து செல்கின்றோம்.
அவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆசிரியர் மனதில் தாக்கத்தை உருவாக்கி செல்கின்றனர்.
மதனும் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியவர்.
அத்துடன் ஒரு மகிழ்ச்சி மிக்க செய்தியை பகிர்ந்தார்.
அதாவது 2025 ஆம் ஆண்டு டி. என் .பி.எஸ்.சி. குரூப் 1
தேர்வில் தேர்ச்சி பெற்று
டி.எஸ்.பி ஆக பொறுப்பேற்க உள்ளார்.
ஏப்ரல் பத்தாம் தேதியே எனக்கு அவை குறித்து முதன் முறையாக குறுஞ்செய்தி வழியாக தகவலை தெரிவித்து இருந்தார்.
தற்போது நேரில் பார்த்த போது மிகுந்த மகிழ்ச்சி.
எப்படி ஒருநாள் சாதிக்க முடிந்தது?என்று கேட்டபோது
சென்னையில் நான்காண்டுகள் வெற்றி ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றதாகவும் இரண்டு முறை முயற்சியை தவற விட்டு மூன்றாவது முறை வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
மேலும் அவருக்கு தாக்கங்கள் ஏற்படுத்திய ஒரு சில ஆசிரியர்களை பற்றி கூறும்போது
"Please mention about Gerald Simon Sir (he was the spark to initiate leadership in me during 6th D)
-Dominic raj Sir (my guru and role model )
Mr.Franklin sudhar sir ( i still remember his individual care and attention on students)
-Thangasami Sir ( one of my grandfather -motivated me alot )
-- Jelastin Sir (NSS ) ,he inspired me about selfless service and my tamil teacher
-Jegaseelan Sir (our project guide )"♥️
தமிழ் வழியில் கல்வி கற்றால் சாதிக்க முடியாது என்று எண்ணும் ஒரு சில பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மதன் பாடமாக இருப்பார்.
கல்வி என்பது தேடலின் அடையாளம்.
அத்தகைய அறிவு தேடலை பள்ளியும் அவனுக்கு அமைந்த ஆசிரியர்களும்
அவனுள் உருவாக்கினர்.
அந்தத் தேடலை
இன்று ஒரு உயரிய பதவி
அவரை நோக்கி வர காரணமாக அமைந்திருந்தது.
அதுபோல வகுப்பறை கல்வியை விட வகுப்பறையை விட்டு வெளியே கற்றுக்கொள்ளும்
கல்வியும் அவருக்கு நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும்.
வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு
"எங்களிடம் பயின்றுள்ளாய்..
நீதி நேர்மை ஒழுக்கம் கடமை கண்ணியம் அனைவரையும் சமமாக பார்க்கும் சமூக பார்வை இவை என்றும் உங்களுக்குள் அணையாத தீபமாக ஒளி வீச வேண்டும்.
என் மாணவன் டிஎஸ்பி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்ற பெருமையை விட
என் மாணவர் சிறந்த காவல்துறை அதிகாரியாக மக்கள் போற்றும் அதிகாரியாக பணி செய்கிறார் என்ற செய்தி தான் எனக்கு பெருமையாக இருக்கும்.
அதனை என்றும் காப்பாற்ற வேண்டும்" என்று கூறி வாழ்த்தினேன்.
வாழ்த்துக்கள் மதன் சார்!
-- ஜே.ஆ டோமினிக் ராஜ்
பள்ளி ஆசிரியர்,
நாகர்கோவில்