Sunday, December 22, 2024

அருட்தந்தை அல்போன்ஸ் வில்லியம் சே.ச.அவர்கள் மறைவு

Carmel_ngl

#RIP
22.12.2024....

அன்புத் தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்.

அருட்தந்தை.M. அல்போன்ஸ் வில்லியம் சே.ச. அவர்கள் 
இன்று காலை 7 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

22.02.1949 அன்று பிறந்த அருட்தந்தை அல்போன்ஸ் வில்லியம் அவர்கள் 
05.01.1967 அன்று இயேசு சபையில் சேர்ந்து 
13.04.1980 இல் இயேசு சபை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டவர்.

நமது கார்மல் பள்ளியில் 
1982 -83 ஆம் ஆண்டில் சேவியர் இல்ல மாணவர்கள் விடுதியில் கண்காணிப்பாளராக இருந்து செயல்பட்டவர்.
1983 முதல் 1986 வரை கார்மல் இல்லத்தின் அதிபர் தந்தையாக திறம்பட செயல்பட்டவர்.
ஏராளமான மாணவர்களை உருவாக்கிய ஆளுமை மிக்கவர். 

இளம் குரு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் ஏதாவது ஒரு கிராமங்களில் கள செயல்பாடுகளை கொண்டு செல்வதற்காக லசாக் என்னும் இயக்கத்தை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவர். 
பின்பு அதனை அனைத்து இயேசு சபை பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு செல்ல காரணமாக இருந்தவர். 
Leadership and social awareness camp -LASAC 
என்ற அமைப்பை எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பதின் பருவத்தின் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களிடம் உருவாக்கி அவர்களை சமூக அக்கறை உள்ளவர்களாக... தலைமை பண்பு மிக்கவர்களாக உருவாக காரணமாக இருந்தவர்.


குறிப்பாக கோடை காலத்தில் ஐந்து நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள இயேசு சபை பள்ளி லசாத் மாணவர்களுக்கு நடக்கும் கோடை முகாம் சிறப்புமிக்க அனுபவமாக இருக்கும். 

அருட்தந்தை மரிய சிகாமணி சே. ச. அவர்களுக்குப் பின்பு 
2000 முதல் 2004 வரை கார்மல் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் தாளாளராகவும் திறம்பட செயல்பட்டவர். 

அப்போது ஆசிரியர் அலுவலர் செயலராக இருந்த நினைவில் வாழும் திரு அந்தோணி முத்து ஆசிரியர் அவர்கள் 
அருட்தந்தையை அறிமுகம் செய்து பேசும்போது 
"அருட்தந்தை சிகாமணியும் அருட்தந்தை வில்லியம் அவர்களும் இயேசு சபையில் இரு ஏஞ்சல்கள் போன்றவர்கள்" 
என்று குறிப்பிட்டு பேசியது என்றும் நினைவில் இருக்கின்றது. 

கார்மல் பள்ளி மாணவர்களுக்கு 
பள்ளியில் பாடக் குறிப்பேடுகளை வழங்கும் திட்டத்தை உருவாக்கியதும் இவர் காலத்தில் தான்.

கணிப்பொறி கல்வி அனைத்து இடங்களிலும் பிரபலமாகி வரும் போது நமது பள்ளியிலும் கணிப்பொறி கல்வி உருவாக காரணமாக இருந்தவர். 
அப்போதே சுமார் 24 கணிப்பொறிகளை வாங்கி கணினி ஆய்வுக்கூடத்தை நம்ம வளாகத்தில் அமைத்தவர். 

11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஆய்வுக்கூடம் இருந்த நிலையில் 
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு ஆய்வுக்கூடமும். 

ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடமும் உருவாகச் செய்தவர்.

ஆய்வுக்கூடங்கள் அமைத்ததோடு மாணவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் ஆய்வுக் கூடத்திற்கு கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி அவர்களுக்கான அறிவியல் ஆய்வு பயிற்சி புத்தகத்தை வெளியிட்டவர்.

காலை தனிப் பயிற்சி, மாலை அணி பயிற்சி, இரவு தனி பயிற்சி என்று பின்தங்கிய மாணவர்களை தனிப்பயிற்சி அமைத்து முன்னேறக் காரணமாக அமைந்தவர்.

தாவரக் கண்காட்சிகளை அமைத்து மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு கண்காட்சி வைத்து 
அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கி பாராட்டியவர்.
கண்காட்சியில் கொண்டு வந்த அனைத்து தாவரங்களையும் பள்ளி வளாகத்திலேயே வைத்து பராமரிக்கச் செய்தவர் 

இன்று வரை நம் வளாகம் 
தொட்டிச் செடிகள் நிறைந்து இருப்பதற்கு காரணம் அவர் போட்ட விதைதான். 

ஆண்டு விழாக்களையும் விளையாட்டு விழாக்களையும் மிக பிரம்மாண்டமாக நடத்த காரணமாக இருந்தவர்.
கலை வார விழா இவரது காலத்திற்குப் பிறகுதான் 
தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

பின் தங்கிய மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் போது காலாண்டு அரையாண்டு தேர்வு முடிந்து வரும் போது அவர்களை பள்ளி மேடையில் ஏற்றி பரிசலித்து பாராட்டியவர்.

அவர் காலகட்டத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

நமது பள்ளியில் நுழைவுத் தேர்வு பயிற்சி கூடங்கள் அமைத்து 
அவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கி மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் எழுதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர வழி வகுத்தவர்.

அவர் கொடுத்த ஊக்கம் அனைவரையும் ஊக்கத்துடன் படித்து தேர்ச்சி பெற காரணமாக அமைந்திருந்தது.

வேலை செய்பவர்களை மேடையில் ஏற்றி பாராட்டும் அவரது குணம் தனிச்சிறப்பு மிக்கிது. 

ஏழை எளிய மாணவர்கள் மீது அதிக அக்கறையுடன் இறக்கத்துடனும் செயல்பட்டவர். 

அறிவியல் சுற்றுலா மற்றும் இன்ப சுற்றுலா செல்லும்போது யாராவது பணம் இல்லை என்றால் அவர்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

விளையாட்டு விழாவில் 
நான்கு அணிகளாக பிரிந்து விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகளின் புள்ளி விவரங்களை தினசரி அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர் 

விளையாட்டு விழா நிறைவின்போது நான்கு அணிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் பரிசு வழங்கி அவர்களை சிறப்பிப்பது இவரது தனி சிறப்புமிக்க நடவடிக்கையாக இருக்கும்.

விளையாட்டு விழா ஆண்டு விழா நிறைவு பெற்றதும் அந்த வளாகம் அந்த இரவே தூய்மையாக ... விழா நடைபெற்றதற்கான 
எந்த ஒரு தடயமும் இல்லாதவாறு வளாகத் தூய்மையை 
பேணிக் காத்தவர்.

மாணவர்கள் கல்வி வசதிக்காக எத்தகைய செலவுகள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்தவர். 

நமது பள்ளி வளாகத்திலேயே கோடைகால முகாம்கள் நடத்தி மாணவர்கள் தனி திறன்களை வளர்த்திட செய்தவர்.

கடமை ...கடமை... கடமை...
இவையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு 
தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியுடன் அருட்பணியும் செய்த அன்பு நெஞ்சம் திண்டுக்கல் பெஸ்கி 
இல்லத்தில் இன்று காலை தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது என்ற தகவல் 
அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தாலும்...
ஏழை எளிய பின் தங்கிய மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு துடித்துக் கொண்டிருந்த அவரது இதய ஒலியை...
 அவரது வழித்தோன்றல்களாகிய மாணவர்களும் ஆசிரியர்களும்
ஏற்று வாழ்வோம். 

அதுவே அன்பு தந்தை அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்! 

-தந்தை அவர்களின் மறைவுக்கு காரணம் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் ,அலுவலர்கள், 
மாணவர்கள், முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Carmel Hss Nagercoil 

No comments:

Post a Comment